சிறுவர் பூங்கா திறப்பு
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர் சூறாவளி மேடு கண்மாய் கரையில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடந்தது. மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா முன்னிலை வகித்தனர். மாணிக்கம்தாகூர் எம்.பி., திறந்து வைத்தார். கண்மாய் வயலகம் நிர்வாகிகள் ஆண்டாள், பால்ராஜ், ராஜேஷ், செல்வராஜ், அய்யல்ராஜ், மீனாட்சிசுந்தரம், ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் பாண்டுரங்கன், காங்., நிர்வாகிகள் ராஜ்குமார், பாண்டியன், சுப்பிரமணி, சத்யன் கலந்து கொண்டனர்.