மேலும் செய்திகள்
புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
10-Jun-2025
மதுரை: மதுரை அஞ்சல் நகர் இடைவிடா அன்னை, பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் துாய பவுல் ஆகிய சர்ச்சுகளில் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கின.அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை சர்ச்சில் மதுரை மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணிமுஸ், மறை மாவட்ட குடும்ப நல்வாழ்வு குழுச் செயலர் ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி, சிறப்பு திருப்பலி நடத்தி விழாவை துவக்கினர். தினமும் மாலை 5:45 மணிக்கு ஜெபமாலை வழிபாடு நடக்கிறது. நவநாள் சிறப்புத் திருப்பலியை பல்வேறு பங்குகளின் பாதிரியார்கள் நிறைவேற்றுவர்.ஜூன் 28ல் மதுரை மறை மாவட்ட பரிபாலகர் அந்தோணிசாமி சவரி முத்து, திருப்பலி நிறைவேற்றி சகாய அன்னை உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனியை துவக்கி வைக்க உள்ளார். ஜூன் 29 காலை 7:30 மணிக்கு சதங்கை கலைக்குழு இயக்குநர் அலெக்ஸ் ஞானராஜ் திருப்பலியுடன் விழாவை நிறைவு செய்கிறார். ஏற்பாடுகளை பாதிரியார் அருள் சேகர் தலைமையில் செய்து வருகின்றனர். பாஸ்டின் நகர்
பாஸ்டின் நகர் துாய பவுல் சர்ச் திருவிழாவை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். தினமும் மாலை 6:00 மணிக்கு பல்வேறு பாதிரியார்களின் ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி நடக்கிறது. ஜூன் 28ல் துாய பவுல் உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெறும். ஏற்பாடுகளை பாதிரியார் ஜெயராஜ் தலைமையில் செய்து வருகின்றனர்.
10-Jun-2025