உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை : மதுரை வேலம்மாள் மருத்துவமனையில், வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் சார்பில் துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.வேலம்மாள் சிறப்பு மருத்துவமனை டீன் ரத்தினவேல், மருத்துவக் கல்லுாரி டீன் திருநாவுக்கரசு, துணை முதல்வர் மகேஷ் கிருஷ்ணா ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதலில் பதாகைகளை ஏந்தியபடி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் பலநுாறு பேர் பங்கேற்றனர். வளாகத்தில் சேர்ந்த குப்பையை அகற்றி சேகரித்தனர். மருத்துவக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை