மேலும் செய்திகள்
இலவச தொழில் முனைவு பயிற்சி
23-Sep-2026
மதுரை: மதுரை கோச்சடை ஜே.கே.பென்னர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் சாஜர் அறக்கட்டளை,பென்னர் நிறுவனம் சார்பில் அக். 26 முதல் ஒருமாதம் 'கிளவுட் கிச்சன்' இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. கேக், குக்கீஸ், பீட்சா, சாண்ட்விச், பிரியாணி வகைகள், மசாலா வகைகள், இட்லி பொடி வகைகள் உட்பட உணவகம் நடத்துவதற்கான உணவு தயாரிப்பு செய்முறை பயிற்சி தினமும் காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை கற்றுத்தரப்படும். எம்.எஸ்.எம்.இ., சான்றிதழ், உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் வழங்கப்படும். வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று இயந்திரங்கள், மூலப்பொருட்கள் வாங்கி தொழில் தொடங்கலாம். ஆன்லைன் உணவு ஆர்டர் பெற வழிகாட்டப்படும். முன்பதிவு: 91500 33571.
23-Sep-2026