உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.16.18 லட்சம் தேங்காய் ஏலம்

ரூ.16.18 லட்சம் தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 18 விவசாயிகளின் 44 ஆயிரத்து 182 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.13.50 முதல் ரூ.41.00 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 955க்கு வர்த்த கம் நடந்தது. மேலும் 25 விவசாயிகளின் 1668 கிலோ கொப்பரை ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.173.20 முதல் ரூ.247.00 வரை விலை போனது. ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 639க்கு வர்த்தகம் நடந்தது. ஏற்பாடுகளை கண் காணிப்பாளர் நாகமுர்த்தி, சந்தை பகுப்பாய்வாளர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி