கிராமங்களில் இன்று நிலுவை வரி வசூல்
மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிலுவையில் உள்ள வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி உட்பட அனைத்து வரிகளையும் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் விரைவாக செலுத்த வேண்டும். வரிவசூல் செய்வது தொடர்பாக அரசு பிரத்யேகமாக உருவாக்கிய vptax.tnrd.tn.gov.inஎன்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது.இந்த இணையதளம் மூலம் தங்கள் வரியை செலுத்தி ரசீது பெறலாம். மேலும் தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலரை அணுகி ரொக்கமாகவோ, ஜி பே, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவும் வரிசெலுத்தலாம். நிலுவை வரியை விரைந்து செலுத்த ஏதுவாக, இன்று (ஏப்.16) அனைத்து ஊராட்சியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. ஊராட்சி அலுவலர்கள் வீடுவீடாக சென்றும் வரிவசூல் செய்ய உள்ளனர் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.