உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டி பகுதியில் கலெக்டர் ஆய்வு

உசிலம்பட்டி பகுதியில் கலெக்டர் ஆய்வு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். விவசாயிகள் சேமித்து வைத்திருந்த வெல்லம் மூடைகளை எதற்காக சேமித்து வைத்துள்ளனர் என கேட்டார். ஓணம் பண்டிகைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என மேற்பார்வையாளர் ஐஸ்வர்யா தெரிவித்தார். நக்கலப்பட்டி சேமிப்புக்கிடங்கில், தானியங்கள் சுத்தப்படுத்தும் பணிகள், விவசாயிகள் குழுவிற்கு வழங்கப்பட்ட தானியங்கள் அரவை இயந்திரத்தை பார்வையிட்டார். அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய கட்டடப்பணிகள், குஞ்சாம்பட்டி புதிய அங்கன்வாடி கட்டடத்தை ஆய்வு செய்தார். தற்போது அங்கன்வாடி மையம் எந்த இடத்தில் செயல்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். தொட்டப்பநாயக்கனுார் பகுதியில் 5 ஏக்கர் கரும்பு பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுவதை பார்வையிட்டார். வகுரணி கிராமத்தில் விவசாயி சன்னாசியின் 5 ஏக்கர் தோட்டத்தில் மானிய உதவியுடன் சொட்டுநீர்பாசனம் (மூடாக்கு)நிலப்போர்வை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முலாம்பழம் பயிர்களையும் பார்வையிட்டார். வேளாண்மை நேர்முக உதவியாளர் சாந்தி, உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை