கமிஷனர் எச்சரிக்கை
மேலுார்: மேலுார் நகராட்சியில் கமிஷனர் பாரத், எஸ். ஐ., தினேஷ்குமார் தலைமையில் ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் தடை செய்த 280 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் ரூ.12 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 'பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்' என கமிஷனர் எச்சரித்தார். சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், மயில்வாகனன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.