தேர்வு முடிந்தும் சான்றிதழ் கிடைக்கவில்லை என புகார்
மதுரை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைநிலைக் கல்வியில் தேர்வு முடிவுகள் வெளியாகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.இப்பல்கலையில் 2024ல் இளங்கலை, முதுகலை, சான்றிதழ் படிப்புக்கான தேர்வு நடந்து மார்ச்சில் முடிவுகள் வெளியாகின. ஆனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. பல்கலை தெரிவித்துள்ள தொடர்பு எண்ணும் செயல்படவில்லை.பல்கலைக்கு நேரில் சென்று அலுவலர்களிடம் கேட்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை என மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை பகுதியில் செயல்பட்ட ஸ்டடி சென்டர்கள் முன்னறிவிப்பின்றி சிதம்பரத்திற்கு மாற்றப்பட்டன. இதனால் அவற்றையும் மாணவர்கள் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.