உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பணி நிறைவு பாராட்டு விழா

 பணி நிறைவு பாராட்டு விழா

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர் சங்கம் (முபா) சார்பில், ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. பொதுச் செயலாளர் முனியாண்டி வரவேற்றார். தலைவர் ஆரோக்கியதாஸ் விழா குறித்து பேசினார். பல்கலை பதிவாளர் முத்தையா பேராசிரியர்களுக்கு பணிநிறைவு மரியாதை செய்வித்து பேசுகையில், ''உலகை சமநிலையில் பார்க்கும் மனப்பான்மை, மனிதனை பண்பட்டவனாக மாற்றுவது கல்வி. அக்கல்வியை வழங்கும் அறப்பணியை செய்யும் ஆசிரியர்கள், சமூக மாற்றத்திற்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள்'' என்றார். பணிநிறைவு பெற்ற பேராசிரியர்கள் ராமசாமி, உமாராஜ், முத்துராஜ், கண்ணன், ராஜ்குமார், ரத்தின சபாபதி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். பொருளாளர் சண் முகைய்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ