உயர்நீதிமன்றத்தில் அரசியலமைப்பு தின விழா
மதுரை : இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் விழா நடந்தது. நிர்வாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில்''அரசியலமைப்பின் முகப்புரையில் இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக குடியரசு என இடம்பெற்றுள்ளது. அனைத்து மக்களுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை உறுதி படுத்துகிறது'' என்றார்.நீதிபதி எம்.நிர்மல்குமார், சங்கங்களின் நிர்வாகிகள் ஐசக் மோகன்லால், சுரேஷ், ஆனந்தவள்ளி, சரவணக்குமார், கிருஷ்ணவேணி, கோவிந்தராஜன், வெங்கடேசன் பங்கேற்றனர். அரசியலமைப்பின் முகப்புரை வாசிப்பு அரசு வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் நடந்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரகதிரவன், பாஸ்கரன், ரவீந்திரன், அரசு உரிமையியல் தலைமை வழக்கறிஞர் திலக்குமார் பங்கேற்றனர். மதுரை மாவட்ட நீதிமன்ற விழாவில் அரசு வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, எழிலரசன் பங்கேற்றனர்.