ஜன.31ல் கன்ஸ்ட்ரக்டிவ் கண்காட்சி துவக்கம்
மதுரை : மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிசினஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் ஜன. 31 முதல் பிப். 2 வரை கன்ஸ்ட்ரக்டிவ் -2025 கண்காட்சியை நடத்துகிறது. இதில் கட்டுமான பொருட்கள், இன்டீரியர், எக்ஸ்டீரியர் அலங்கரிப்பு ஹோம் டெக்கர்ஸ், பர்னிச்சர்களுக்கான பொருட்கள் இடம்பெறுகின்றன. இக்கண்காட்சி கட்டட கலை நிபுணர்கள், பொறியாளர்கள், பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள், அலங்கார நிபுணர்கள், புதிதாக வீடுகட்டுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.2.67 லட்சம் மானியம், வீட்டுக்கடன் நிறுவனங்களின் ஆலோசனை, கட்டுமான செலவை குறைப்பது, மிக குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.