உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆலோசனை கூட்டம் 

ஆலோசனை கூட்டம் 

சோழவந்தான் : சோழவந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 'அ' வகுப்பு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.முன்னாள் தலைவர் முத்துலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்றார்.1995 ல் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு கடன் சங்கமாக தொடங்கப்பட்டது. தற்போது 1071 உறுப்பினர்கள் உள்ளனர்.போதுமான நிதி இல்லாததால் நகை, மாற்றுத்திறனாளி, தாட்கோ, சிறுபான்மையினர், வீட்டு வசதி கடன்கள் வழங்க முடியவில்லை.தற்போது கால்நடை பராமரிப்பு பயிர் கடன் மட்டுமே வழங்கப்படுகிறது. உறுப்பினர் வைப்பு நிதியை கூட்ட வேண்டும். சிறுசேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை