நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு சவுக்கடி காங்., எம்.பி., பேட்டி
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியதாவது: கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு சவுக்கடி என்றால், உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா. உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எஸ்.ஐ.டி. குழு அமைத்து விசாரணை நடத்த த.வெ.க., கேட்டது. மற்றொன்று பாதிக்கப்பட்டோர் சார்பில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் எனக் கேட்கப்பட்டது. சி.பி.ஐ., விசாரணை த.வெ.க., வின் கோரிக்கை இல்லை. இருப்பினும் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விசாரணையை விரைவில் முடித்து விடுமா. சி.பி.ஐ., அதிகாரிகள் இல்லாமல் தத்தளிக்கிறது. அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரியான தீர்வு காண முடியாத அமைப்பாக சி.பி.ஐ., மாறியுள்ளது. சி.பி.ஐ., அமித்ஷாவின் கைகளில் இருக்கிறது. சி.பி.ஐ., விசாரணையால் உடனே நியாயம் கிடைக்கும் என்பது கண்துடைப்புதான். சி.பி.ஐ., அமித்ஷா நினைப்பது போலத்தான் செயல்படுகிறது என்றார்.