பயிர் மேலாண்மை முகாம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் குட்லாடம்பட்டியில் துவரையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாம் நடந்தது.வேளாண் துணை இயக்குனர் ராணி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் பாண்டி, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பேசினர். உதவி வேளாண் அலுவலர் பாண்டியராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணாதேவி பங்கேற்றனர்.