உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிர் ரகங்கள் விழிப்புணர்வு கண்காட்சி

பயிர் ரகங்கள் விழிப்புணர்வு கண்காட்சி

மதுரை: மதுரை விவசாய கல்லுாரி விதை அறிவியல், நுட்பவியல் துறை சார்பில் பயிர் ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி, பயிலரங்கு நடந்தது.மதுரை, திருமங்கலம், டி. கல்லுப்பட்டி விவசாயிகள், முதுநிலை விவசாய மாணவர்கள் பங்கேற்றனர். துறைத்தலைவர் சுஜாதா வரவேற்றார். டீன் மகேந்திரன் தலைமை வகித்தார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பயிலரங்க கையேடு வெளியிட்டு விவசாயிகளுக்கு விதை வில்லைகள் வழங்கினார். இணைப்பேராசிரியர் அலெக்ஸ் ஆல்பர்ட் நன்றி கூறினார்.மதுரையின் பிரத்யேக நாட்டு ரகங்களான சென்னம்பட்டி பாகற்காய், எட்டு நாழி கத்தரிக்காய், காரைக்கேணி கத்தரிக்காய், செங்கப்படை வரகு ஆகியவற்றை விவசாயிகள் காளிமுத்து, ரமேஷ் ஆவணப்படுத்தி குறும்படமாக வெளியிட்டனர்.புவி சார் குறியீட்டுக்கான திட்ட அலுவலர் சஞ்சய்காந்தி பயிர் வகைகளை ஆவணப்படுத்துதல் முறையை விளக்கினார். திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகைப்பயிர்கள் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி முருகேசன் பயிர் ரகங்கள் மற்றும் உழவர்கள் பாதுகாப்புச் சட்டம் பற்றி பேசினார்.இனப்பெருக்கவியல் பேராசிரியர் குணசேகரன், இணை பேராசிரியை ஆனந்தி, தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் வேலுச்சாமி கார்த்திகேயன், மதுரை மாபிப் சி.இ.ஓ., கணேஷ் மூர்த்தி, கிரியேட் தலைவர் துரைசிங்கம், வையை கூட்டமைப்பு நிர்வாகி கருணாகர சேதுபதி, திருப்பூர் தேசிய விதை சேமிப்பாளர் ப்ரியா பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை