உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கலாசார நட்புறவு கழக கூட்டம்

கலாசார நட்புறவு கழக கூட்டம்

மதுரை : மதுரையில் இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜரத்தினம் கூறியதாவது: ஜனவரியில் ஐதராபாத்தில் அகில இந்திய மாநாடு நடக்க உள்ளது. இதில் பல்வேறு நாட்டு கலாசார அமைப்பினர் பங்கேற்பர். பள்ளி, கல்லுாரிகளில் மாணவர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இளைஞர்களிடம் இச்சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை எடுத்துரைத்து, அரசியல் பயிற்சியும், தன்மான பயிற்சியும், பன்முகத்தன்மை குறித்தும் அவர்களை மாற்றவும் அக்கறை கொண்டு செயல்படுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி