உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரி மாணவருக்கு வெட்டு

கல்லுாரி மாணவருக்கு வெட்டு

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சூர்யா 22. கல்லுாரியில் படிக்கிறார். இவருக்கும், இவரது நண்பர்களுக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று இரவு சூர்யா அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நண்பர்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த நண்பர்கள், வாள் மற்றும் ஆயுதங்களால் சூர்யாவை வெட்டிவிட்டு தப்பினர். சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ