மேலும் செய்திகள்
தந்தை மீதான கோபத்தில் மகளை பழிதீர்த்த பெண்
07-Oct-2024
மதுரை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) கடனுதவி வழங்குகிறது.மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் போன்ற திட்டங்கள் டாம்கோ மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையுள்ள 60 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும்.ஜாதி, வருமானம், இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். அல்லது மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
07-Oct-2024