உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அபாய மின்கம்பங்கள்

அபாய மின்கம்பங்கள்

அலங்காநல்லுார்: -: அலங்காநல்லுார் அருகே வாவிடமருதுார் ரோட்டோரத்தில் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. சத்திரப்பட்டி ரோட்டில் வளைவான பகுதியில் 2 மின் கம்பங்கள் கம்பிகளின் இழுவை தாங்காமல் சாய்ந்துள்ளன. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சத்திரப்பட்டி, அலங்காநல்லுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் பலமிழந்து நிற்கின்றன. விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கம்பங்களை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை