தி.மு.க., எம்.எல்.ஏ., மகனால் பத்திரப்பதிவு நிறுத்தம்
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 16 சென்ட் இடத்தை வாங்க அன்னக்கொடி என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு ரூ. 40 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார். அதே இடத்திற்கு மதுரை தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி மகன் துரை கோபால்சாமியும் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.நேற்று பத்திரம் பதிய திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு துரை கோபால்சாமி வந்தார். அங்கு வந்த அன்னக்கொடி தரப்பினர் தாங்கள் அட்வான்ஸ் கொடுத்துள்ள இடத்திற்கு எப்படி பதிவு செய்ய முடியும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் டென்ஷனான சார் பதிவாளர் சுரேஷ், 'இருதரப்பினரும் பேசி யார் பத்திரம் பதிய வேண்டுமோ வாருங்கள். பதிந்து தருகிறோம்' எனக்கூறி அந்த பத்திரப்பதிவை நிறுத்தி வைத்தார்.