வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பிடியே சுப்ரிம் கோர்ட் நிலுவைக் கேசுங்களையும் பாருங்க.
மதுரை : குற்ற வழக்குகளில் குறித்த காலத்திற்குள் வழக்கு விசாரணை ஆவணங்களை அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு (செஷன்ஸ்) மாற்றிஅனுப்பி வைக்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துமாஜிஸ்திரேட்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சரோன்ராஜ் என்பவர் மீது திண்டுக்கல் டவுன் தெற்கு போலீசார் 2016 ல் ஒரு கொலை வழக்கு பதிந்தனர். கைதான அவர் ஜாமின் கோரிஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு: மனுதாரர் 2020 முதல் தலைமறைவானார். மனுதாரர் மற்றும் அவரது கூட்டாளிகள் இவ்வழக்கில் சாட்சியான காதர் அலியை 2017 ல் கொலைசெய்தனர். இதற்காக 2017 ல் மற்றொரு கொலை வழக்கு பதியப்பட்டது. இதில் திண்டுக்கல் (ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் 2018 ல் குற்றப்பத்திரிகை செய்யப்பட்டது. மற்றவர்கள் தலைமறைவாகினர். இதை அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்ற மேல்விசாரணைக்கு (கமிட்டல் புரசிடிங்ஸ்) மாற்றுவது தொடர்பான விசாரணை 6 ஆண்டுகளாகநிலுவையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: மனுதாரர் 2023 ல் கைதானார். அதன் பிறகும் ஏன் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பான விசாரணை நடக்கவில்லை என தெரியவில்லை. மாஜிஸ்திரேட் (3),'குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவானதால், வழக்கு விசாரிக்கப்படவில்லை. தற்போது அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என அறிக்கை சமர்ப்பித்தார்.மனுதாரர் மீது 2016 ல் பதிவான முதல் கொலை வழக்குகூட நிலுவையில் உள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விடுதலையாகியுள்ளார். இதனடிப்படையில் மனுதாரர் தற்போது ஜாமின் கோருகிறார். வழக்கில் சாட்சிகள் பாதுகாக்கப்படுவது, அச்சுறுத்தல் இன்றி நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். ஆறு ஆண்டுகளாக இரண்டாவது வழக்கை நடத்தாமல் நீதிமன்றமும் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது.பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்திற்கு சில பொறுப்பு, கடமைகள் உள்ளதை மாஜிஸ்திரேட்கள் உணர வேண்டும். கொலை வழக்கில் நேரில் கண்ட சாட்சி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதற்காக, மாஜிஸ்திரேட் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையை அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை தாமதப்படுத்தியுள்ளர். இதுதான் நிலைமை எனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க சாட்சிகளுக்கு தைரியம் வராது. இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வழக்கை 2018 அக்.,22முதல் 2024 மார்ச் 25 வரை விசாரித்த, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்களிடம் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் விளக்கம்கோர வேண்டும்.குற்ற வழக்குகளில்குறித்த காலத்திற்குள் வழக்கு விசாரணை ஆவணங்களை அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு (செஷன்ஸ்) மாற்றிஅனுப்பி வைக்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் (ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள்) சுற்றறிக்கையை பதிவாளர் ஜெனரல் அனுப்ப வேண்டும்.பிடிவாரன்ட் நிலுவையிலுள்ள வழக்குகளில், தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும். வழக்கை வேறு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.,யை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
அப்பிடியே சுப்ரிம் கோர்ட் நிலுவைக் கேசுங்களையும் பாருங்க.