உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பதில் மனு தாமதம்; உயர்நீதிமன்றம் அபராதம்

பதில் மனு தாமதம்; உயர்நீதிமன்றம் அபராதம்

மதுரை: மதுரை நல்லதம்பி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை சம்பக்குளம் விரிவாக்கம் சுவாமி சிவானந்தா நகர் பூங்காவில் சிலரால் சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதை அகற்றி பூங்காவை பாதுகாக்க வலியுறுத்தி கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், டி.ஆர்.ஓ., மதுரை வடக்கு தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசன்னா ராஜதுரை ஆஜரானார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: எதிர்மனுதாரர்களான அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. சில எதிர்மனுதாரர்களால் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யும்போது உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு தலா ரூ.1000 ஐ அக்.,14 அல்லது அதற்கு முன்பு செலுத்த வேண்டும் என்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி