மேலும் செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
28-Oct-2024
அவனியாபுரம் ; மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சின்ன உடைப்பு பகுதியில் விவசாய நிலங்கள், வீடுகள், கோயில், மயானம் உள்ளிட்ட இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக தங்களுக்கு தமிழக அரசு வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சின்ன உடைப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலை ராஜன் தலைமை வகித்தார். கவுன்சிலர் முத்துலட்சுமி, நிர்வாகிகள் மதுரை வீரன் சக்திவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல் ராஜன் பங்கேற்றனர்.
28-Oct-2024