உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

மதுரை: அரசு உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., யின் ஊதியமாற்றம் உத்தரவின்படி வழங்க வேண்டிய சம்பளம், நிலுவைத் தொகையை வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் மூட்டா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.2ம் மண்டல தலைவர் வில்சன் பாஸ்கர், முதலாம் மண்டல துணைத் தலைவர் கவிதா தலைமை வகித்தனர். முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பெரியதம்பி, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், கார்த்திகேயன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி நீதிராஜன், மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா, பொது செயலாளர் செந்தாமரை கண்ணன் பேசினர். நிர்வாகி ஞானேஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை