ஆர்ப்பாட்டம்.
மதுரை: மதுரையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மக்கள் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் அஜித்குமார் வரவேற்றார். பி.ஆர்.ஓ., போஸ் நன்றி கூறினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாத்துரை, இணை ஒருங்கிணைப்பாளர் பூவை ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.