வளர்ச்சி அலுவலர் செயற்குழு கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் விரிவடைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சிவமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மகேஸ்வரன் வரவேற்றார். மாநில செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்.ஓய்வூதியம் என்ற தலைப்பில் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அன்பழகன், நிர்வாகி ஆசை உட்பட பலர் பேசினர். பொருளாளர் அமுதரசன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நிறைவுரையாற்றினார். மாவட்ட தணிக்கையாளர் பிரபு நன்றி கூறினார்.வட்டார, நகர் கிளைகளில் இருந்து வரும் கோரிக்கைகளை தொகுத்து கலெக்டர், இணை இயக்குனரை சந்தித்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.