பயத்தில் பக்தர்கள்
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலின் நுழைவு வாயிலில் மலை தேனீக்கள் தேன் கூடு கட்டி பக்தர்களை வி(மி)ரட்டுகின்றன.இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் அச்சத்துடனே வருகின்றனர்.தவிர கோயிலில் சுற்றி திரியும் குரங்குகள் தேன் கூட்டை கலைத்தால் பக்தர்கள், பாதசாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். தேனீக்களை அறநிலையத்துறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.