உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்க்கரை நோயும் இன்சுலின் மருந்தும்

சர்க்கரை நோயும் இன்சுலின் மருந்தும்

சர்க்கரை நோய், மனித உடலில் சுரக்கும் இன்சுலின் குறைபாட்டால் ஏற்படுகிறது. அதனால் செயற்கையாக தேவைக்கு ஏற்ப இன்சுலின் செலுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இன்சுலின் ஊசி செலுத்தியபின் சாப்பிடாமல் இருப்பது, உடலின் ஒரே பகுதியில் செலுத்துவது, எப்போதும் சிறிதளவு இனிப்புகள் கைவசம் இல்லாமல் இருப்பது, தனக்குத்தானே இன்சுலின் அளவை நிர்ணயித்துக் கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஊசி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது, தாழ் சர்க்கரை நிலை வராமல் சுயமாக தன்னை பராமரிக்க கற்றுக் கொள்வது, குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பரிசோதனை செய்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.பசி, தலைவலி, தலைச்சுற்றல், வியர்வை, குழப்ப மனநிலை, கை கால் நடுக்கம், மயக்கம் போன்றவை சர்க்கரைநோய்க்கான அறிகுறிகளாகும். சர்க்கரை அளவு 80 முதல் 120 மி.கி., வரை இருக்க வேண்டும். 54 மி.கி., கீழ் இருந்தால் தாழ் சர்க்கரை நிலையாகும். சரி செய்ய முடியாத பின் விளைவுகள் ஏற்படுவதற்கு முன்பே, தொடக்கத்திலேயேரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை அடைய தவறிவிட்டால் பின்னர் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், பார்வையிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டல செயலிழப்பு உள்ளிட்டவைகளைதவிர்க்க முடியாது.- டாக்டர் ரபீக்மதுரை94434 48683


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ