உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு போட்டிகள்

பள்ளியில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு போட்டிகள்

மதுரை: மதுரை எஸ்.பி.ஜெ., மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினம், சர்க்கரை நோய் தினத்தையொட்டி மதுரை டிரீம்ஸ் பவுண்டேஷன், அஸ்வின் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு, ஆரோக்கிய சமையல் உணவு போட்டிகள் நடந்தன.இதில் மதுரை, மேலுார், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 36 பள்ளிகள், 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு கையேடும், பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி நாகராஜன் பங்கேற்றார். மதுரை டிரீம்ஸ் பவுண்டேஷன் தலைவர் ஆனந்த்குமார், செயலாளர் பழனிச்சாமி, துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ஜெயமித்ரா, அறங்காவலர்கள் ஜெயசித்ரா, ரங்கநாதன், அபிலாஷ், ஜெயராதா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை