உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி குழாய் சீரமைப்பு

தினமலர் செய்தி குழாய் சீரமைப்பு

சோழவந்தான்: திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் அருகே மதுரைக்கு குடிநீர் செல்லும் ராட்சத குழாய் சில நாட்களுக்கு முன்பு உடைந்தது. தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி ரோட்டில் ஆறாக ஓடியது. இதனால் அவ்வழியே நடந்து வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் கடன் சங்க வளாகம் முழுதும்  தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர். அதிகாரிகளுக்கும், தினமலர் இதழக்கும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை