உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மத்திய சிறையில் இயக்குநர் ஆய்வு

மத்திய சிறையில் இயக்குநர் ஆய்வு

மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தை வயதுவந்தோர் மற்றும் பள்ளிசாரா கல்வி இயக்கக இயக்குநர் முத்துபழனிசாமி ஆய்வு செய்தார். எழுத படிக்க தெரியாத கைதிகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் மதுரை உட்பட 9 மத்திய சிறைகளில் செயல்பாட்டில் உள்ளது. மதுரை சிறையில் இத்திட்டத்தில் 107 பேர் கல்வி பயில்கின்றனர். கற்பித்தல் பணி செயல்பாடுகளை இயக்குநர் ஆய்வு செய்தார். ஆறு மாத பயிற்சிக்கு பின் இவர்களுக்கு கல்வித்துறை மூலம் சான்றிதழ் வழங்கப்படும். பின் இவர்கள் நேரடியாக 8ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவர். ஆய்வின் போது டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர், சதீஷ்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை