உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் கட்சிகள் குறித்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரையில் நேற்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில சட்ட ஆலோசகர் முத்துக்குமார் ஏற்பாட்டில், மாநிலதலைவர் நாகபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோபி, மாநில பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரா, நிர்வாகிகள் முருகவேல், ஆறுமுகம் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை