உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேமட்டான்குளம் கண்மாயில் வாமணர் சிற்பம் கண்டெடுப்பு

சேமட்டான்குளம் கண்மாயில் வாமணர் சிற்பம் கண்டெடுப்பு

மதுரை:திருநகரில் உள்ள சேமட்டான்குளம் கண்மாயில் வாமணர் சிற்பம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஆய்வாளர்கள் தேவி, அறிவுசெல்வம், விஸ்வநாதன், தமிழ்தாசன் கூறியதாவது: இரண்டரை அடி உயரம் ஒன்றரை அடி அகலம் கொண்ட ஒழுங்கற்ற கல்லில் வாமணர் சிற்பம் மென் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் கமண்டலத்துடன் வலது கையானது குடையை விரித்து பிடித்தபடி உள்ளது. இடது காலை முன்னெடுத்து இடப்பக்கம் பார்த்த நிலையில் தோலில் காவடி போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இந்த சிற்பமானது அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலம் எனப்படும் நிலமாகவோ அல்லது அவர்கள் குடியிருக்கும் இடத்தை தெரிவிக்கும் அறிவிப்பு பலகையாகவோ இருக்கலாம். இதே போன்ற அந்தணர் சிற்பமானது திருமங்கலம் வடகரை பகுதியிலும் காணப்படுகிறது. இது 16ம் நுாற்றாண்டாக இருக்கலாம். அருகில் ஆவணப்படுத்தப்பட்ட தெலுங்கு கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !