மேலும் செய்திகள்
குளியல் தொட்டியில் தண்ணீரின்றி அவதி
26-May-2025
சோழவந்தான்:சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் கோவில்பட்டியில் பயன்படாமல் உள்ள குளியல் தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே உள்ள குளியல் தொட்டி பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. மக்கள் மயானத்தில் இறுதிச்சடங்குகளின் போதும், சுகாதாரத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது செயல்படாமல் இருப்பதால் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.அப்பகுதியைச் சேர்ந்த சந்தனம் கூறுகையில், ''இலைச்சருகுகள், குப்பை நிறைந்து தொட்டி பாழடைந்துள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
26-May-2025