மாவட்ட தடகள போட்டி முடிவுகள்
மதுரை |: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி இயக்குநர் வினோத் ஏற்பாடுகளை செய்திருந்தார். மகளிர் பிரிவு போட்டி முடிவுகள் 14 வயது 100 மீட்டர் ஓட்டத்தில் தாடையம்பட்டி அரசுப் பள்ளி நிஷாதேவி முதலிடம் பெற்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்பார்ட்டன்ஸ் பள்ளி தன்ஷிகா, 400மீ, 600 மீ ஓட்டத்தில் மகாத்மா மாண்டிசோரி பள்ளி தயாலினி, 80 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் டி.வி.எஸ். பள்ளி அக்ஷிதா, நீளம் தாண்டுதலில் கேரன் பள்ளி நித்யஸ்ரீ, உயரம் தாண்டுதலில் செயின்ட் ஜோசப் பள்ளி முகிலா, குண்டு எறிதலில் பொன்மணி பள்ளி பவானி, வட்டு எறிதலில் அய்யப்பநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி யுவஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 4 X 100 மீட்டர் ரிலேயில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம் பெற்றது. 17 வயது பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் லீ சாட்லியர் பள்ளி தனுஸ்ரீ, 200மீ. ஓட்டம், 100மீ தடைதாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதலில் ஓ.சி.பி.எம்., பள்ளி ஹர்ஷிதா, 400மீ ஓட்டத்தில் சி.இ.ஓ.ஏ., பள்ளி தன்ஷிகா, 800மீ ஓட்டத்தில் ஓ.சி.பி.எம்., பள்ளி சிவதர்ஷினி, 1500மீ ஓட்டத்தில் தெற்குதெரு அரசு பள்ளி வித்யா, 3000 மீ ஓட்டத்தில் ஓ.சி.பி.எம். பள்ளி கனிஷ்கா, உயரம் தாண்டுதலில் அண்ணாமலையா பள்ளி அனன்யா, மும்முறை தாண்டுதலில் லீ சாட்லியர் பள்ளி ராஷ்மி, போல்ட் வால்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி விகாஷினி, குண்டு எறிதலில் இந்தியன் 3 சி பள்ளி நாகதர்ஷினி, வட்டு எறிதலில் கே.பெருமாள்பட்டி அரசு பள்ளி மி த்ரா, ஈட்டி எறிதலில் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி பவதாரணி முதலிடம் பெற்றனர். 4 X 100 மீ, 4 X 400 மீ ரிலேயில் ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடம் பெற்றது. 19 வயது பிரிவு 100 மீ ஓட்டம், 100 மீ, 400 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் தியாகராஜர் பள்ளி யோகப்ரியா, 200 மீ, 400 மீ, 800 மீட்டரில் ஓ.சி.பி.எம்., பள்ளி ஐஸ்வர்யா, 1500 மீ, 3000 மீட்டரில் ஓ.சி.பி.எம்.பள்ளி சிவஹரிணி, நீளம் தாண்டுதலில் சைதை துரைசாமி பள்ளி ரித்திஸ்ரீ, உயரம் தாண்டுதலில் செயின்ட் ஜோசப் பள்ளி அனிதா, மும்முறை தாண்டுதலில் சி.இ.ஓ.ஏ. பள்ளி பவஸ்ரீ, போல்வால்டில் ஸ்ரீமன் நாயகியர் மந்திர் பள்ளி திவ்யதர்ஷினி, குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் சி.இ.ஓ.ஏ., பள்ளி ரக்ஷனா ஆகியோர் முதலிடம் பெற்றனர். 4 X 100 மீ, 4 X 400 மீ ரிலேயில் ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடம் பெற்றது.