மாவட்ட செஸ் போட்டி
அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜா மேல்நிலைப் பள்ளியில், குளோபல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட செஸ் போட்டி நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் செல்வராஜ் துவக்கி வைத்தார். 7, 9, 12, 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள்நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களில் வென்ற மாணவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டன. கிளப் வாரியாக அதிக வெற்றிகளை பதிவு செய்ததில், ஆனந்தி செஸ் அகாடமி முதலிடம், கோல்டன்நைட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இரண்டாமிடம், சாணக்யா செஸ் அகாடமி மூன்றாம் இடம் பிடித்தன. மாவட்ட செஸ் சர்க்கிள் பொருளாளர் நாகராஜன் உள்பட நிர்வாகிகள், அனைவருக்கும் கேடயம் வழங்கினர்.