உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மேற்கில் 5 ஆயிரம் ஓட்டுக்களுக்கு ஒரு வ.செ., தி.மு.க., புது வியூகம்

மதுரை மேற்கில் 5 ஆயிரம் ஓட்டுக்களுக்கு ஒரு வ.செ., தி.மு.க., புது வியூகம்

மதுரை: மதுரை மேற்குத் தொகுதியில் 5 ஆயிரம் ஓட்டுக்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் (வ.செ.,) என்ற வீதத்தில் வ.செ.,க்களின் எண்ணிக்கையை 50க்கும் மேல் அதிகரிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ. தி.மு.க., தரப்பில் இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் மூர்த்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் ரீதியாக இத்தேர்தலில் இத்தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தொகுதி ஏற்கனவே நகர் தி.மு.க., எல்லைக்குள் இருந்தது. இதனால் வட்டம், பகுதி செயலாளர்கள் என பலரும் தளபதி எம்.எல்.ஏ., ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள் மூர்த்தி உத்தரவை முழுவதும் பின்பற்றுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதை சமாளிக்க வட்டங்களை பிரித்து, எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய செயலாளர்களாக மூர்த்தி ஆதரவாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மூர்த்தி ஆதரவு நிர்வாகிகள் கூறியதாவது: மொத்தமுள்ள 10 தொகுதிகளில் மேற்கு சவாலான தொகுதி. இதனால் இங்கு அமைச்சர் அதிக கவனம் செலுத்தி, ரூ.பல கோடி அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் வ.செ.,க்கள் சிலர் அதற்கு ஏற்ப பணி செய்வதில்லை. இதனால் தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்க 5 ஆயிரம் ஓட்டுக்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வீதம் 59 பேரை நியமிக்கவும், பகுதிச் செயலாளர் எண்ணிக்கையை 5ல் இருந்து 11 ஆக அதிகரிக்கவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார் என்றனர். அதேநேரம் இத்தொகுதியில் பல ஆண்டுகளாக கட்சிப் பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் பலர், தளபதி ஆதரவாளர் என்பதற்காக அமைச்சர் ஓரங்கட்டலாமா என அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை