மருத்துவர்கள் தின விழா
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் நினைவு பரிசு வழங்கினர். தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி, டாக்டர்கள் தனசேகரன், வேல்முருகன், முத்துலட்சுமி, நிர்மலன், சிவக்குமார், கவிதாவிற்கு தொழிற்சங்க செயலாளர் கவுரிநாதன் நினைவுப் பரிசு வழங்கினார். நிர்வாகி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.