உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தகவல் அறியும் சட்டத்தில் ஆவணங்கள்

தகவல் அறியும் சட்டத்தில் ஆவணங்கள்

மேலூர் : மேலுார் அருகே கருங்காலக்குடி பக்ருதீன் அலி அகமத். இவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேலூர் தாலுகா அலுவலகம் துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வக்பு மற்றும் இனாம் சொத்துக்களுக்கு உண்டான ஏழு வகையான ஆவணங்களை பார்வையிட அனுமதி கேட்டு மனு செய்திருந்தார். அதன் பேரில் நேற்று ஆவணங்களை பார்வையிடவும், ஆவணங்கள் தேவைப்பட்டால் அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி நகலை பெற்றுக் கொள்ளவும் பொது தகவல் அலுவலர் அனுமதி அளித்திருந்தார்.நேற்று பக்ருதீன் அலி அகமத் மற்றும் முன்னாள் தும்பைபட்டி ஊராட்சி தலைவர் அயூப்கான் ஆவணங்களை சரி பார்க்க அலுவலகம் சென்றனர். ஆவணங்களை தரவேண்டிய சர்வேயர் நீதிமன்றம் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகத்தில் நடந்த கூட்டம் முடிந்து இரவு 9:00 மணிக்கு தாலுகா அலுவலகம் வந்தனர். அதுவரை காத்திருந்த பக்ருதீன், அயூப்கான் சர்வேயரிடம் இருந்து ஆவணங்களை பெற்று திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை