உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவமனைக்கு நன்கொடை

மருத்துவமனைக்கு நன்கொடை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனைக்கு அன்பு பெட்டகம், பீனிக்ஸ் ரோட்டரி கிளப், எக்கோஸ் ஆப் கைன்னெஸ் அமைப்புகள் சார்பில் மூன்று ஸ்டீல் பீரோக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஆடைகள், குழந்தை புற்றுநோயாளிகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. ஆர்.எம்.ஓ., சரவணன் கூறுகையில்,'' இந்த அமைப்புகள் 14 வது முறையாக மாதந்தோறும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நுாறு நைட்டிகளை வழங்குகின்றன'' என்றார். உதவி ஆர்.எம்.ஓ., சுமதி, அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ