உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாக்டர் வெங்கடசாமி விருது

டாக்டர் வெங்கடசாமி விருது

மதுரை : மறைந்த மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழும நிறுவனர் டாக்டர் வெங்கடசாமி நினைவைப் போற்றும் வகையில் கண் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது. பார்வை நலத்தில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்ட டாக்டர் லியோன் எல்வினுக்கு 2025ம் ஆண்டுக்கான விருதை கோவெல் அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிம் வழங்கினார். கவுரவ தலைவர் டாக்டர் நாச்சியார் முன்னிலை வகித்தார். டாக்டர் வெங்கடசாமியின் சேவைகளை கண் மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் ரவீந்திரன் நினைவுகூர்ந்தார். இயக்குநர் (ஆப்பரேஷன்ஸ்) துளசிராஜ் ரவில்லா, செயல்இயக்குநர் திவ்யா ராமசாமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை