உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமங்கலம் பகுதியில் வறண்டு போன கண்மாய்கள்

திருமங்கலம் பகுதியில் வறண்டு போன கண்மாய்கள்

திருமங்கலம் : திருமங்கலம்,கள்ளிக் குடி தாலுகாக்களில் போதிய மழைப்பொழிவு இல்லாத நிலையில், வைகை அணையில் தண்ணீரும் திறந்து விடாததால் கண்மாய்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.இத் தாலுகாக்களில் 30க்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்கள் உள்ளன. இந்தாண்டு இப்பகுதியில் போதிய மழைப் பொழிவு இல்லாததால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கடைசி நேரத்தில் வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உள்ளது.தற்போது கண்மாய்கள் முற்றிலும் வறண்டுள்ள நிலையில், திருமங்கலம் பிரதான கால்வாய், கிளைக் கால்வாய்களுக்கு வைகைத் தண்ணீரும் திறக்கப்படவில்லை. இதனால் திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் மழையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் வறட்சியால் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.வைகையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பி பயிர்களை காப்பாற்றும் நிலை உள்ளது.மாவட்ட நிர்வாகம் திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு, வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை