2 நாட்கள் குடிநீர் கட்
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 24 குலமங்கலம் மெயின் ரோடு, ஜீவா நகர் மெயின் தெருவில் பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணிக்காக (ஆக.,13,14) குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன் வார்டுகள் விவரம்: 1-8, 10 - 11, 23- 39, 41 -43, 46- 49, 53 -54, 76. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கமிஷனர் கவுரவ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.