டிரைவர் பலி
வாடிப்பட்டி: சோழவந்தான் அடுத்த கண்ணுடையாள்புரம் பூவலிங்கம் 37, மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் டிரைவர்.பிப்.,24 அதிகாலை 4:00 மணிக்கு மதுரைக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வேலைக்கு சென்றார். திண்டுக்கல்-மதுரை ரோடு பரவை கண்மாய் காரை அருகே சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி சென்றதில் கிழே விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.