மேலும் செய்திகள்
கஞ்சா, குட்கா விற்ற ஐந்து பேர் கைது
14-Oct-2024
மதுரை:மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பகுதியில் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல இடங்களில் விசாரணை நடத்தினர். செல்லுார் 80 அடி ரோட்டில் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே போலீசாரை கண்டதும் ஒரு இளைஞர் தப்பியோட முயற்சித்தார்.அவரை பிடித்து விசாரித்த போது போதை மாத்திரைகள், காலி சிரிஞ்சுகள், குளுகோஸ் பாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது. அவர் செல்லுார் தாகூர்நகரைச் சேர்ந்த உதயகுமார், 21, பெரியார் பஸ் ஸ்டாண்ட் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள மருந்துக்கடையில் போதை மாத்திரைகள் வாங்கியதும், குளூகோஸ் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி போதை மருந்து கலந்து, போதை ஏற்றியதும் தெரியவந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்துக்கடையில் சோதனை நடத்திய போலீசார் போதை மாத்திரைகள், காலி சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் ஜெய்ஹிந்துபுரம் அப்துல் ரஹ்மான், 23, என்பவரை கைது செய்தனர். அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
14-Oct-2024