பூமி பூஜை
திருமங்கலம்: செக்கானுாரணி பஸ் ஸ்டாண்ட் பாழடைந்ததால் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட், கட்டடங்கள் கட்ட பூமி பூஜை நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் சங்கீதா, மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, சந்திரகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.