வாடிப்பட்டி சர்ச் சில் ஈஸ்டர் கொண்டாட்டம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை 'சர்ச்'சில் ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக புனித வெள்ளியையொட்டி புனித வார சடங்குகள், வழிபாடுகள் 3 நாட்கள் நடந்தன. முதல் நாள் ஏசுவின் கடைசி இரவு உணவு திருப்பலி, பாதம் கழுவும் சடங்கும், புனித வெள்ளி அன்று காலை 7:00 முதல் 4:00 மணி வரை நற்கருணை ஆராதனை, சிலுவை பாதை வழிபாடு நடந்தது. ஏப்.19 இரவு 11:00 மணிக்கு பாஸ்கா சடங்குகள் மற்றும் திருப்பலி, 12:00 மணிக்கு ஏசு கிறிஸ்து உயிர்ப்பு வழிபாடு முன்னாள் உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடந்தது. நேற்று ஈஸ்டர் விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை பாதிரியார் வளன், நிர்வாக பாதிரியார் ஆன்டனி வினோ உட்பட பலர் செய்தனர்.