உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கல்வித்துறை விருது

 கல்வித்துறை விருது

மதுரை: மதுரையில் நடந்த குடியரசு தின விழாவில், கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய சி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் திருஞானம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பிரபு, ஆண்டார்கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி, மேலுார் கல்வி மாவட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜ் ஆகியோரின் பணியை பாராட்டி கலெக்டர் பிரவீன்குமார் விருது, சான்றிதழ் வழங்கினார். மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக துறைவாரியாக வசூலிக்கப்பட்ட கொடிநாள் வசூலில், கல்வித்துறை முதலிடம் பெற்றதற்காக சி.இ.ஓ., தயாளனுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !