மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
7 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
8 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
9 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
9 hour(s) ago
மதுரை : 2011 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.,சார்பில் பிரசாரத்திற்காக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்டம் மேலுார் அருகே அம்பலகாரன்பட்டி கோயிலுக்கு வந்து கட்சியினரை சந்தித்தார். தேர்தல் விதிகள் மீறப்படுவதாகக்கூறி வீடியோ எடுக்க அப்போதைய தாசில்தார் காளிமுத்து உத்தரவிட்டார். இதனால் தன்னை தி.மு.க.,வினர் தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் அளித்தார்.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் ரகுபதி உட்பட 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. மதுரை நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,1) நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. சம்பவத்தின்போது ஆயுதப்படை ஏட்டாக இருந்த சரவணன் தேர்தல் பறக்கும்படையில் இடம்பெற்றார். வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவருக்கு வாரன்ட் பிறப்பித்து நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டார்.
7 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago